close
Choose your channels

சிம்புவுடன் இணைகிறார் அடல்ட் காமெடி இயக்குனர்

Thursday, January 7, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சமீபத்தில் வெளியான ஜி.வி.பிரகாஷ், 'கயல்' ஆனந்தி மற்றும் மனிஷா நடித்த 'த்ரிஷா இல்லைனா நயன்தாரா' என்ற அடல்ட் காமெடி திரைப்படம் இளைஞர்களிடையே பெரும் வரவேற்பு பெற்ற நிலையில் இந்த படத்தின் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் மீண்டும் ஒரு இளைஞர்களுக்கான படத்தை எடுக்க திட்டமிட்டுள்ளார்.

இம்முறை ஆதிக் ரவிச்சந்திரன் இணையவுள்ளது சிம்புவுடன் என்பது குறிப்பிடத்தக்கது. பீப் பாடல் விவகாரத்தில் பல எதிர்மறை கருத்துக்களை சந்தித்து வரும் சிம்புவுக்கு தனது படத்தின் கதையை கூறி ஒப்புதல் பெற்றுவிட்டதாகவும் விரைவில் இந்த படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளிவரும் என்றும் கூறப்படுகிறது.

இதனிடையே சிம்பு நடித்து முடித்துள்ள 'அச்சம் என்பது மடமையடா' மற்றும் 'இது நம்ம ஆளு' ஆகிய திரைப்படங்களையும் விரைவில் ரிலீஸ் செய்ய அந்தந்த படத்தயாரிப்பு நிறுவனங்கள் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.