சிம்ரனுக்கு கிடைத்த சிறப்பு அந்தஸ்து

  • IndiaGlitz, [Saturday,December 19 2015]

நேற்று வெளியான தனுஷின் 'தங்கமகன்' திரைப்படம் இவ்வருடத்தில் வெளியாகும் 200வது படம் என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்நிலையில் அடுத்த வருடம் அதாவது வரும் 2016ஆம் ஆண்டில் வெளியாகும் முதல்படம் குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது.

2016ஆம் ஆண்டு ஜனவரியில் பல படங்கள் வெளியாக உள்ளபோதிலும், ஜனவரி முதல் தேதியே சிம்ரன் நடித்த 'கரையோரம்' திரைப்படம் வெளிவருகிறது. இந்த படம்தான் அடுத்த வருடத்தில் வெளியாகும் முதல் தமிழ்ப்படம் என்ற சிறப்பு அந்தஸ்தை பெறவுள்ளது.


இந்த படத்தின் ரிலீஸ் தேதியுடன் கூடிய போஸ்டர் இன்று இணையதளங்களில் வெளியாகியுள்ளதால் ஜனவரி 1ஆம் தேதி இந்த படத்தின் ரிலீஸ் உறுதி என கூறப்படுகிறது.

போலீஸ் அதிகாரியாக சிம்ரன் நடிக்கும் இந்த படத்தில் நிகிஷா பட்டேல், இனியா, சுனில் ஷெட்டி, எம்.எஸ்.பாஸ்கர், மனோபாலா, சிங்கம்புலி உள்பட பலர் நடிக்கின்றனர். திகில் படமான இந்த படத்தை ஜெகதீஷ்குமார் இயக்கியுள்ளார். இந்த படம் ஒரே நேரத்தில் படம் தமிழ், தெலுங்கு, கன்னடம் என மூன்று மொழிகளில் ரிலீஸ் ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

விஜய்யுடன் முதல்முறையாக இணைகிறாரா சூப்பர்ஸ்டார்?

இளையதளபதி விஜய், சமந்தா, எமிஜாக்சன் உள்பட பலர் நடித்து வரும் 'தெறி' படத்தின் படப்பிடிப்பு விரைவில் முடிவடையவுள்ள நிலையில் விரைவில் விஜய்யின் 60வது படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது...

ரஜினி, டி.ஆரிடம் ஏன் கேள்வி கேட்கவில்லை. கங்கை அமரன்

சிம்பு-அனிருத்தின் பீப் பாடலால் அவர்கள் இருவருக்கு மட்டுமின்றி வேறு சிலருக்கும் பிரச்சனை எழுந்துள்ளது....

ஆசிய அளவில் 2வது, 3வது இடங்களை பிடித்த ரஜினி, விஜய் நாயகிகள்

பிரபல சமூக வலைத்தளமான டுவிட்டரில் கிட்டதட்ட அனைத்து நடிகர், நடிகைகளும் தற்போது இருக்கின்றனர் என்பது அனைவரும் அறிந்ததே...

சலங்கை ஒலி-சங்கராபரணம் போன்ற படங்களை இயக்க ஆசை. பிரபுதேவா

ஒவ்வொரு வருடமும் சென்னை நகரில் நடைபெறும் முக்கிய நிகழ்ச்சி 'சென்னையில் திருவையாறு' என்பது அனைவரும் அறிந்ததே...

குழந்தைகளுக்கு ஓவிய போட்டி வைத்த பசங்க 2' படக்குழு

சூர்யா நடிப்பில் பாண்டியராஜ் இயக்கிய 'பசங்க 2' படம் வரும் 24ஆம் தேதி வெளியாகவுள்ளது...