close
Choose your channels

குழந்தைகளுக்கு ஓவிய போட்டி வைத்த பசங்க 2' படக்குழு

Saturday, December 19, 2015 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூர்யா நடிப்பில் பாண்டியராஜ் இயக்கிய 'பசங்க 2' படம் வரும் 24ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்த படம் குழந்தைகளுக்கான படம் என்பதால் குழந்தைகளுக்கு ஒரு போட்டியை 'பசங்க 2' படக்குழு அறிவித்துள்ளது.


இதன்படி 8 வயதில் இருந்து 13 வயதுவரை உள்ள குழந்தைகள் வரைந்த ஓவியங்களை சமூக வலைத்தளங்களில் #HaikuDrawingContest என்ற ஹேஷ்டேக்கில் போஸ்ட் செய்ய வேண்டும் என்றும் தேர்வு செய்யப்படும் ஓவியங்களுக்கு பரிசு அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஓவியங்களை வரும் 22ஆம் தேதிக்குள் போஸ்ட் செய்ய வேண்டும் என்றும், முடிவுகள் 23ஆம் தேதி அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.,

இப்போதே ஏராளமான குழந்தைகளின் ஓவியங்கள் மேற்கண்ட ஹேஷ்டேக்கில் பதிவு செய்யப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

சூர்யா, அமலாபால் ஆகிய இருவரும் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ள இந்த படத்தில் பிந்துமாதவியும் குழந்தை நட்சத்திரங்களும் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளனர். அரோல் கரோலி இசையமைத்துள்ள இந்த படத்தை சூர்யாவின் 2D நிறுவனம் தயாரித்துள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.