close
Choose your channels

விஜய்யுடன் முதல்முறையாக இணைகிறாரா சூப்பர்ஸ்டார்?

Saturday, December 19, 2015 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இளையதளபதி விஜய், சமந்தா, எமிஜாக்சன் உள்பட பலர் நடித்து வரும் 'தெறி' படத்தின் படப்பிடிப்பு விரைவில் முடிவடையவுள்ள நிலையில் விரைவில் விஜய்யின் 60வது படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பரதன் இயக்கவுள்ள இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.


இந்நிலையில் விஜய்யின் 61வது படம் குறித்த வதந்திகள் இணையதளங்களிலும், சமூக வலைத்தளங்களிலும் மிக வேகமாக பரவி வருகிறது. விஜய்யின் 61வது படத்தை 'தனிஒருவன்' ராஜா இயக்கவுள்ளதாகவும் இந்த படத்தில் மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டி முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த தகவல் உண்மையானால் ஏற்கனவே மலையாள முன்னணி நடிகர் மோகன்லாலுடன் விஜய் நடித்த 'ஜில்லா' படம் போலவே இந்த படமும் சூப்பர் ஹிட் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது. விஜய்யுடன் மம்முட்டி இணைந்தால் அந்த படம் எவ்வாறான வரவேற்பை பெரும் என்பதை கீழே உள்ள கமெண்ட் பாக்ஸில் தெரிவிக்கவும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.