close
Choose your channels

'என்னடி முனியம்மா உன் கண்ணுல மை' புகழ் பாடகர் காலமானார்: திரையுலகினர் இரங்கல்

Wednesday, May 5, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கடந்த சில நாட்களாக தமிழ் திரை உலகில் உள்ள பிரபலங்கள் காலமாகி வருவது திரையுலகினரை அதிர்ச்சியடைய செய்துள்ளது. விவேக், தாமிரா, கேவி ஆனந்த் உள்பட பலர் தொடர்ச்சியாக காலமாகி வரும் நிலையில் தற்போது சிவாஜி கணேசன், கமல், ரஜினி உள்பட பல படங்களில் நடித்த நடிகர் மற்றும் பாடகர் டிகேஎஸ் நடராஜன் அவர்கள் காலமாகி உள்ளார்.

டிகேஎஸ் நாடகக்குழுவில் பல நாடகங்களில் நடித்ததால் இவருக்கு டிகேஎஸ் நடராஜன் என்ற பெயர் உண்டாகியது. கடந்த 1954 ஆம் ஆண்டு ’ரத்தபாசம்’ என்ற திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான இவர் 500க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார் என்பதும் சங்கர்-கணேஷ் இசையில் ’வாங்க மாப்பிள்ளை வாங்க’ என்ற திரைப்படத்தில் இடம்பெற்ற ’என்னடி முனியம்மா உன் கண்ணுல மை’ என்ற இவர் பாடிய பாடல் தமிழகம் முழுவதும் சூப்பர் ஹிட் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்தநிலையில் பாடகர்-நடிகர் டிகேஎஸ் நடராஜன் அவர்கள் இன்று காலை காலமானார். அவருக்கு வயது 87. பாடகர் மற்றும் நடிகர் டிகேஎஸ் நடராஜன் மறைவுக்கு திரை உலக பிரபலங்கள் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.