close
Choose your channels

விஜய்யின் அடுத்த பட இயக்குனரை உறுதி செய்த பிரபல பாடகர்!

Tuesday, July 27, 2021 • தமிழ் Comments

தளபதி விஜய் நடித்து வரும் 65வது திரைப்படமான ’பீஸ்ட்’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது தெரிந்ததே. நெல்சன் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் இந்த படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது என்பதும் மூன்றாம் கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் தளபதி விஜய் நடிக்க இருக்கும் ’தளபதி 66’ திரைப்படத்தை பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரிக்க இருப்பதாகவும் தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்க இருப்பதாகவும் கூறப்பட்டது. இந்த தகவல் கிட்டத்தட்ட உறுதி என்று கூறப்பட்ட நிலையில் இந்த தகவலை மேலும் உறுதி செய்துள்ளார் பிரபல பாடகர் ஒருவர்.

இன்று இயக்குனர் வம்சி தனது பிறந்தநாளை கொண்டாடி வருவதை அடுத்து தெலுங்கு திரையுலக பிரபலங்கள் அவருக்கு தொடர்ச்சியாக வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் பிரபல பாடகர் கிரிஷ் தனது சமூக வலைதளப் பக்கத்தில் இயக்குனர் வம்சிக்கு தனது பிறந்தநாள் வாழ்த்துக்களை கூறியதோடு நீங்கள் இயக்க இருக்கும் விஜய் அண்ணாவின் படத்திற்கும் தனது வாழ்த்துக்கள் என்று கூறியுள்ளார். இதனை அடுத்து விஜய்யின் அடுத்த படத்தை வம்சிதான் இயக்க உள்ளார் என்பது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டு உள்ளதாகவே கருதப்படுகிறது.

Get Breaking News Alerts From IndiaGlitz