close
Choose your channels

என்னால நம்பவே முடியலையே.. 'வாரிசு' இசை விழாவில் மானஸிக்கு நேர்ந்த சர்ப்ரைஸ்!

Sunday, December 25, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய் நடித்த ‘வாரிசு’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடந்த நிலையில் இந்த விழாவில் விஜய் பேசிய அரை மணி நேர பேச்சு குறித்த செய்திகள் இணையதளங்களில் வைரலாக வருகின்றன.

இந்த நிலையில் இந்த இசை விழாவில் ’ரஞ்சிதமே’ பாடலை பாடிய மானஸிக்கு நேர்ந்த ஒரு சர்ப்ரைஸ் குறித்த தகவல் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த இசை விழாவில் ரஞ்சிதமே பாடலில் விஜய்யுடன் பாடிய மானஸி மேடையில் கொண்டிருந்தபோது திடீரென அவரது மைக் வேலை செய்யவில்லை. தொடர்ந்து அதுபோல் மைக் பிரச்சனை செய்து கொண்டிருந்த நிலையில் திடீரென யாருமே எதிர்பாராத வகையில் விஜய் மேடைக்கு சென்று தனது மைக்கை மானஸிக்கு கொடுத்தார். இதனால் மானஸி பெரும் ஆச்சரியம் அடைந்தார்.

இதனையடுத்து ‘வாரிசு’ இசை விழா முடிந்தவுடன் காரில் மானஸி வீடு திரும்பிக் கொண்டிருந்த போது ’என்னால் நம்பவே முடிய வில்லையே, எல்லோருக்கும் போட்டோவுக்கு போஸ் கொடுத்தார், ஆனால் எனக்கு மைக்கையே கொடுத்தார் என பதிவு செய்துள்ள வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Related Videos