close
Choose your channels

போன வாரம் 'அருவி', இந்த வாரம் 'அறிவு': உறவுக்காரர்கள் பெற்ற வெற்றிகள்

Friday, December 22, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கடந்த வாரம் வெளியான 'அருவி' சூப்பர் பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்றது. இன்று இரண்டு புதிய படங்கள் வெளியான போதிலும் 'அருவி' படம் இன்னும் சில திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருப்பதில் இருந்தே இந்த படத்திற்கு பொதுமக்கள் கொடுத்து வரும் ஆதரவை தெரிந்து கொள்ள முடிகிறது.

அதேபோல் இந்த வாரம் 'அறிவு' என்ற கேரக்டரில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள 'வேலைக்காரன்' படத்திற்கும் சமூக வலைத்தளங்கள் மற்றும் ஊடகங்கள் பாசிட்டிவ் விமர்சனத்தை கொடுத்துள்ளதால் இந்த படமும் நிச்சயம் வெற்றிப்பட்டியலில் இணையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் அருவி இயக்குனர் அருண்பிரபு புருஷோத்தமனும், சிவகார்த்திகேயனும் உறவினர்கள் என்பது தெரிய வந்துள்ளது. சிவகார்த்திகேயனின் கசின் தான் இந்த அருண்பிரபுவாம். எனவே போன வாரம் 'அருவி' பெற்ற வெற்றியை இந்த வாரம் 'அறிவு' பெறுவதில் வியப்பில்லை தானே

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.