close
Choose your channels

சிவகார்த்திகேயன் - பொன்ராம் படம் தொடங்கும் தேதி?

Friday, June 9, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சிவகார்த்திகேயன், நயன்தாரா நடிப்பில் மோகன்ராஜா இயக்கி வந்த 'வேலைக்காரன்' படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்டது என்பதையும், இந்த படத்தின் பேட்ச்வொர்க் மட்டுமே இன்னும் 10 நாட்களுக்கு உள்ளது என்பதையும் நேற்று பார்த்தோம்.
இந்த நிலையில் பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ள அடுத்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த வாரம் தொடங்கவிருப்பதாகவும், அனேகமாக ஜூன் 16ஆம் தேதி இந்த படம் பூஜையுடன் தொடங்கப்படும் என்றும் செய்திகள் வெளிவந்துள்ளது.
'வருத்தப்படாத வாலிபர் சங்கம்', 'ரஜினிமுருகன்' என இரண்டு வெற்றிப்படங்களுக்கு பின்னர் மீண்டும் இணையவுள்ள சிவகார்த்திகேயன் - பொன்ராம் கூட்டணியின் இந்த புதிய படத்தில் சமந்தா, சூரி உள்பட பலர் நடிக்கவுள்ளனர். டி.இமான் இந்த படத்திற்கு இசையமைக்கவுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.