close
Choose your channels

'அயலான்' படத்தின் 'அயலா அயலா' பாடல் ரிலீஸ்.. பாடியவர்கள் யார் யார்?

Wednesday, December 20, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சிவகார்த்திகேயன் நடிப்பில் ரவிக்குமார் இயக்கத்தில் உருவான ’அயலான்’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இறுதி கட்ட தொழில் நுட்ப பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.

இந்த படம் பொங்கல் திருநாளில் வெளியாக இருப்பது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த படத்தின் சிங்கிள் பாடல் சற்றுமுன் இணையத்தில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது.

ஆஸ்கார் நாயகன் ஏஆர் ரகுமான் கம்போஸ் செய்த இந்த பாடலை விவேக் எழுதியுள்ளார். இந்த பாடலை நரேஷ் அய்யர் மற்றும் ஹிரிடே கட்டானி ஆகியோர் பாடியுள்ளனர்.

முதல் முறை கேட்கும் போது இந்த பாடல் அசத்தலாக உள்ளது என்பதும் ஏ ஆர் ரகுமான் சிறப்பாக கம்போஸ் செய்துள்ளதால் மனதை மயக்கும் வகையில் உள்ளது என்றும் இந்த பாடலை கேட்டு ரசிகர்கள் தங்கள் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

ஏற்கனவே வெளியான முதல் சிங்கிள் பாடல் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது இரண்டாவது சிங்கிள் பாடலும் வெளியாகி உள்ளது. மேலும் விரைவில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவும் நடைபெற பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

சிவகார்த்திகேயன், ரகுல் ப்ரித்திசிங், இஷா கோபிகர், யோகி பாபு, கருணாகரன், உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு நீரவ்ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார். கேஜேஆர் ஸ்டுடியோஸ் மற்றும் 24 ஏஎம் ஸ்டுடியோஸ் நிறுவனங்கள் இந்த படத்தை தயாரித்து வருகின்றன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.