close
Choose your channels

சிவகார்த்திகேயன் கொடுத்த இரண்டு உறுதிமொழிகள்

Saturday, March 31, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழ் சினிமாவை பொருத்தவரையில் கடந்த சில வருடங்களாக டாஸ்மாக் காட்சிகள் அதிகம் இடம்பெறுகின்றன. டாஸ்மாக் கடையில் பாடல்கள், சண்டைக்காட்சிகள், காமெடி காட்சிகள் மட்டுமின்றி படத்தின் தலைப்புக்கே மதுவகைகளின் பெயர் வைக்குள் அளவுக்கு டாஸ்மாக் தமிழ் சினிமாவோடு ஒன்றியுள்ளது.

இந்த நிலையில் இனிமேல் தனது படங்களில் டாஸ்மாக் காட்சிகள் இருக்காது என்று சிவகார்த்திகேயன் உறுதியளித்துள்ளார். "முன்பெல்லாம் டாஸ்மாக் காட்சிகளில் நடிப்பதை ஒரு ஜாலியாக நினைத்ததாகவும்,  ஆனால் இப்போதுதான் அதன் கொடிய தாக்கம் தனக்கு புரிந்திருப்பதாகவும் கூறியுள்ள சிவகார்த்திகேயன் டாஸ்மாக் காட்சி தனக்கு மட்டுமின்றி தனது படத்திலேயே இருக்காது என்று கூறியுள்ளார்.

மேலும் அதேபோல் தனது படத்தில் இனிமேல் பெண்களை கிண்டல் செய்யும் வகையிலான காட்சிகளும் இருக்காது என்று அவர் உறுதியளித்துள்ளார்.

இந்த நிலையில் தனது படத்தின் பாதி காட்சிகளை டாஸ்மாக்கில் படமாக்கும் இயக்குனர் எம்.ராஜேஷ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.