close
Choose your channels

'வேலைக்காரன்' டீசர் ரிலீஸ் தேதி அறிவிப்பு

Friday, August 4, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கோலிவுட் திரையுலகில் அஜித், விஜய் படங்களுக்கு இணையான ஓப்பனிங் வசூல் தரும் படங்களை கொடுத்து வருபவர் சிவகார்த்திகேயன். இவருடைய படம் நல்ல லாபத்தை தருவதால் அதன் ரிலீஸ் உரிமையை பெற கடும் போட்டி ஏற்பட்டு வருகிறது.
இந்த நிலையில் சிவகார்த்திகேயன் தற்போது நடித்து வரும் 'வேலைக்காரன்' திரைப்படம் இந்த ஆண்டின் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள படங்களில் ஒன்று ஆகும். இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லும் சமீபத்தில் வெளிவந்து பெரும் வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது இந்த படத்தின் அடுத்த லுக் மற்றும் டீசர் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
'வேலைக்காரன்' படத்தின் செகண்ட் லுக் வரும் 8ஆம் தேதி வெளியாகவுள்ளதாகவும், இந்த படத்தின் டீசர் வரும் 14ஆம் தேதி மாலை 6 மணிக்கு வெளியாகவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனமான 24 ஏஎம் ஸ்டுடியோ நிறுவனத்தின் சமூக வலைத்தள பக்கத்திலும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும் செகண்ட் லுக் வெளியாகும் ஆகஸ்ட் 8ஆம் தேதி இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வரும் பிரபல மலையாள நடிகர் பகத் பாசிலின் பிறந்த நாள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.