close
Choose your channels

'வேலைக்காரன்' ரிலீஸ் தேதி: அதிகாரபூர்வ அறிவிப்பு

Thursday, September 7, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சிவகார்த்திகேயன், நயன்தாரா நடிப்பில் மோகன் ராஜா இயக்கி வரும் 'வேலைக்காரன்' திரைப்படம் வரும் 29ஆம் தேதி வெளியாகும் என்று கடந்த சில வாரங்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் ஒருசில காரணங்களால் படப்பிடிப்பு தாமதம் ஆனதன் காரணமாக இந்த தேதியில் படம் வெளியிட வாய்ப்பில்லை என்று படக்குழுவினர் ஏற்கனவே தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையில் தீபாவளி தினத்தில் ஏற்கனவே தளபதி விஜய்யின் 'மெர்சல்' உள்பட ஒருசில படங்கள் ரிலீஸ் ஆக உள்ள நிலையில் 'வேலைக்காரன்' படமும் அதே தினத்தில் வெளியாகும் என்று செய்திகள் வெளிவந்தன. ஆனால் தற்போது 'வேலைக்காரன்' தயாரிப்பு நிறுவனம் இந்த படத்தின் அதிகாரபூர்வ ரிலீஸ் தேதியை அறிவித்துள்ளது.

இந்த படம் வரும் கிறிஸ்துமஸ் விடுமுறை நாட்களை ஒட்டி டிசம்பர் 22ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இன்னும் இரண்டு பாடல்களின் படப்பிடிப்பு நடைபெற வேண்டிய நிலையில் இந்த படத்தின் போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.