close
Choose your channels

சூப்பர்ஹிட் பட இயக்குனருடன் இணையும் சிவகார்த்திகேயன்!

Thursday, February 17, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கடந்த ஆண்டு வெளியான சூப்பர் ஹிட் படத்தின் இயக்குனர் உடன் நடிகர் சிவகார்த்திகேயன் இணைய இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சிவகார்த்திகேயன் நடித்த ’டாக்டர்’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி 100 கோடி கிளப்பில் இணைந்து என்பது தெரிந்ததே. இதனை அடுத்து அவர் ’டான்’ மற்றும் ‘அயலான்’ ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ளார் என்பதும் இந்த இரண்டு படங்களும் விரைவில் வெளியாக உள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தற்போது தமிழ் தெலுங்கு மொழிகளில் உருவாகி வரும் படத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் அடுத்ததாக யோகி பாபு நடித்த ‘மண்டேலா’ என்ற திரைப்படத்தை இயக்கிய அஸ்வின் இயக்கும் அடுத்த படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது. அஸ்வின் இயக்கிய ‘மண்டேலா’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பதும் இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல ஆதரவு கிடைத்தது என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் சிவகார்த்திகேயனுடன் இயக்குனர் அஸ்வின் இணைந்துள்ளதால் இந்த படத்திற்கு நல்ல எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் இந்த படத்தை சிவகார்த்திகேயனின் எஸ்கே புரடொக்சன்ஸ் பட நிறுவனம் தயாரிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.