close
Choose your channels

ரசிகர்களுக்கு சிவகார்த்திகேயன் கொடுத்த திடீர் சர்ப்ரைஸ்

Monday, June 25, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சிவகார்த்திகேயன் நடித்து முடித்துள்ள 'சீமராஜா' திரைப்படம் வரும் விநாயகர் சதுர்த்தி தினத்தில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அவர் இயக்குனர் எம்.ராஜேஷ் இயக்கத்தில் ஒரு படமும், இயக்குனர் ரவிகுமார் இயக்கத்தில் ஒரு படத்திலும் நடிக்கவுள்ளார்.

மேலும் சிவகார்த்திகேயன் தயாரிக்கும் முதல் படமான 'கனா' படத்தில் சத்யராஜ், ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர் என்பதும் தெரிந்ததே. சிவகார்த்திகேயனனின் நண்பரும் பாடகர், பாடலாசிரியருமான அருண்காமராஜ் இயக்கி வரும் இந்த படம் பெண்கள் கிரிக்கெட் குறித்த கதையம்சம் கொண்டது.

இந்த நிலையில் 'கனா' படத்தில் சிவகார்த்திகேயன் முக்கிய வேடம் ஒன்றில் நடிக்கவிருப்பதாக சர்ப்ரைஸ் செய்தி ஒன்று வெளிவந்துள்ளது. பொதுவாக நடிகர்கள் தயாரிக்கும் படங்களில் அவர்கள் சிறப்பு தோற்றங்களில் மட்டும் நடிப்பதுண்டு. ஆனால் இந்த படத்தில் சிவகார்த்திகேயன் சுமார் 30 முதல் 40 நிமிடங்கள் தோன்றும் முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

சிவகார்த்திகேயன் முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளார் என்ற தகவல் இந்த படத்தின் வியாபாரத்திற்கு மிகப்பெரிய அளவில் உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.