close
Choose your channels

'கேப்டன் மில்லர்' படத்தில் என்ன கேரக்டர்? சிவராஜ்குமார் கூறிய ஆச்சரிய தகவல்!

Sunday, December 4, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தனுஷ் நடிப்பில் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகிவரும் ‘கேப்டன் மில்லர்' என்ற படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் இந்த படத்தில் தனுஷ் ஜோடியாக பிரியங்கா அருள்மோகன் நடித்து வருகிறார் என்பதையும் ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில் இந்த படத்தில் சமீபத்தில் கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார் இணைந்துள்ளார் என்று கூறப்பட்ட நிலையில் அவர் இந்த படத்தில் என்ன கேரக்டரில் நடிக்கிறார் என்ற தகவல் தற்போது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

‘கேப்டன் மில்லர்’ படத்தில் தனுஷின் அண்ணனாக நடித்து வருவதாக சிவராஜ்குமார் சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியுள்ளார். இதனை அடுத்து சிவராஜ்குமார் மற்றும் தனுஷ் ஆகிய இருவரும் அண்ணன் தம்பிகளாக நடித்துள்ளனர் என்ற தகவல் தனுஷ் ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் 'கேப்டன் மில்லர்’ என்ற படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு குற்றாலத்தில் நடைபெற இருப்பதாகவும் அதில் தனுஷ் மற்றும் சிவராஜ்குமார் இணைந்து நடிக்கும் காட்சிகள் படமாக்க திட்டமிட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது.

ஜிவி பிரகாஷ் இசையில் உருவாகி வரும் இந்த படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஒரு சில வாரங்களில் முடிந்துவிடும் என்றும் கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.