close
Choose your channels

ஓடிடிக்காக உருவாகும் சூரியின் படம்.. நாயகி இந்த பிரபலமா?

Friday, January 20, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சமீபகாலமாக திரையுலகின் நகைச்சுவை நடிகர்கள் ஹீரோவாக நடித்து வருகின்றனர் என்பதும் சந்தானம் உள்பட பல நகைச்சுவை நடிகர்கள் ஹீரோவாக வெற்றி பெற்று வருகிறார்கள் என்பதையும் பார்த்து வருகிறோம்

அந்த வகையில் நடிகர் சூரி, வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி வரும் ’விடுதலை’ என்ற படத்தில் ஹீரோவாக நடித்து வரும் நிலையில் தற்போது அவர் ஓடிடிக்காக உருவாகும் இன்னொரு படத்தில் அவர் ஹீரோவாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

சூரி நடிப்பில் பிஎஸ் வினோத் ராஜ் இயக்கத்தில் உருவாகும் இந்த படத்தை நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிக்க இருப்பதாகவும் இந்த படத்தின் பூஜை நேற்று நடைபெற்றதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

மேலும் சூரி ஜோடியாக இந்த படத்தில் பிரபல மலையாள நடிகை அன்னபென் நடிக்கவுள்ளார். இவர் ஏற்கனவே மலையாளத்தில் சூப்பர்ஹிட் வெற்றி பெற்ற ’ஹெலன்’ ‘காப்பா’ உள்பட ஒரு சில படங்களில் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.