close
Choose your channels

சூரியின் ஆச்சரியத்தக்க மாற்றம்: வைரலாகும் புகைப்படம்

Sunday, September 20, 2020 • தமிழ் Comments

சூரியின் ஆச்சரியத்தக்க மாற்றம்: வைரலாகும் புகைப்படம்

தமிழ் சினிமா உலகில் காமெடி நடிகர்களில் முன்னணி இடத்தில் இருப்பவர்களில் ஒருவர் நடிகர் சூரி என்பது தெரிந்ததே. இவர் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாக உள்ள ஒரு திரைப்படத்தில் கதாநாயகனாக நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் வெற்றிமாறனின் படத்திற்காக நீண்ட தாடி வளர்த்திருந்த சூரியின் புகைப்படங்கள் அவ்வப்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது

இந்த நிலையில் சற்று முன்னர் அவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் தாடி இல்லாமல் இருக்கும் புகைப்படத்தை பதிவு செய்துள்ளார். மேலும் இந்த புகைப்படத்தில் அவரது கட்டுடலை பார்த்து ரசிகர்கள் ஆச்சரியம் அடைந்துள்ளனர்.

கடந்த சில மாதங்களாக லாக்டவுன் இருந்த நேரத்தில் அவர் முறையான உடற்பயிற்சி மூலம் தனது உடலை சிக்கென வைத்துள்ளார். இதற்காக தனது பயிற்சியாளர் வசந்த் சர்வான் அவர்களுக்கு தனது நன்றியை தெரிவித்துக் கொள்வதாகவும் சூரி குறிப்பிட்டுள்ளார்

ஒரு கதாநாயகனுக்கு உரிய கட்டுடல் உடலமைப்பை தற்போது சூரி பெற்றுள்ளதை அடுத்து அவர் வெற்றிமாறன் படத்தை தொடர்ந்தும் நாயகன் வேடத்தில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சூரியின் இந்த சிக்ஸ்பேக் புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது
 

Get Breaking News Alerts From IndiaGlitz