close
Choose your channels

'சார்பாட்டா' படத்தின் முக்கிய பணியை முடித்த படக்குழுவினர்!

Monday, July 5, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடித்த திரைப்படம் ’சார்பாட்டா’ என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது விறுவிறுப்பாக போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் இந்த படத்தின் முக்கிய பணிகளில் ஒன்றான சவுண்ட் மிக்சிங் பணி முடிந்துவிட்டதாக தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து கிட்டத்தட்ட இந்த படம் ரிலீசுக்கு தயாராகி விட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த படத்தை திரையரங்குகளில் பிரமாண்டமாக ரிலீஸ் செய்ய வேண்டும் என படக்குழுவினர் எதிர்பார்த்த நிலையில் தற்போது திரையரங்குகள் எப்போது திறக்கும் என்று தெரியாததால் ஓடிடியில் ரிலீஸ் செய்ய படக்குழுவினர் முடிவு செய்தனர். இதனை அடுத்து அமேசான் ஓடிடியில் ’சார்பாட்டா’ படம் ரிலீஸ் ஆக உள்ளதாக சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. விரைவில் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆர்யா, துஷாரா, கலையரசன், சந்தோஷ் பிரதாப், ஜான் விஜய் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைத்துள்ளார். முரளி ஒளிப்பதிவில், செல்வா படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படத்தை ரஞ்சித்தின் நீலம் புரொடக்சன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.