close
Choose your channels

ஸ்ரீதேவியின் 2வது மகளை அறிமுகம் செய்யும் பிரபல தயாரிப்பாளர்!

Thursday, April 25, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஸ்ரீதேவியின் மூத்த மகள் ஜான்வி கபூர், கடந்த ஆண்டு வெளியான 'தடக்' என்ற பாலிவுட் படத்தின் மூலம் சினிமாவில் நுழைந்த நிலையில் தற்போது அவரது இரண்டாவது மகள் குஷிகபூரும் விரைவில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார்.

அலியாபட், சித்தார்த் மல்கோத்ரா, வருன் தவான் உள்ளிட்ட பல பிரபலங்களின் வாரிசுகளை திரையில் அறிமுகம் செய்த பிரபல பாலிவுட் தயாரிப்பாளர் கரண்ஜோஹர், குஷிகபூரையும் ஒரு படத்தில் அறிமுகம் செய்யவிருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

குஷிகபூர் தற்போது நியூயார்க்கில் நடிப்பு பயிற்சிப்பள்ளியில் பயின்று வருவதாகவும், விரைவில் அவர் நடிக்கவிருக்கும் பாலிவுட் படம் குறித்த அறிவிப்பு வெளிவரும் என்றும் கூறப்படுகிறது.

பாலிவுட்டில் ஸ்ரீதேவியின் இடம் இன்னும் நிரப்பப்படாமல் காலியாக இருக்கும் நிலையில் ஜான்வி கபூர், குஷி கபூர் ஆகிய இருவரில் ஒருவர் அவரது இடத்தை நிரப்புவார்களா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.