close
Choose your channels

'விக்ரம் 58' படத்தில் இணைந்த வெற்றிப்பட நாயகி!

Wednesday, October 16, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சியான் விக்ரம் நடிப்பில் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் உருவாகி வரும் ’விக்ரம் 58’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தில் பிரபல கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் இணைந்தார் என்ற தகவலை சமீபத்தில் பார்த்தோம்.

இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் நாயகி குறித்த அறிவிப்பு வெளிவந்துள்ளது. இந்த படத்தில் விக்ரம் ஜோடியாக சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற கே.ஜி.எஃப் படத்தின் நாயகியான ஸ்ரீநிதிஷெட்டி நடிக்க உள்ளார் என்பதை இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனமான செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. இதன் மூலம் ஸ்ரீநிதிஷெட்டி ஒரு நேரடி தமிழ் படத்தில் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவாகி வரும் இந்த படத்தில் படம் விக்ரம் 10க்கும் மேற்பட்ட கெட்டப்பில் நடிக்கவுள்ளார்.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.