close
Choose your channels

கமல் இல்லையென்றால் 'பாபநாசம் 2' படம் இல்லை: ஸ்ரீப்ரியா

Wednesday, September 29, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கமல்ஹாசன் இல்லையென்றால் ’பாபநாசம் 2’ படம் இல்லை என நடிகை ஸ்ரீபிரியா தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கமல்ஹாசன் நடிப்பில் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ’பாபநாசம்’. இந்தத் திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்ற நிலையில் ’த்ரிஷ்யம் 2’ படத்தின் தமிழ் ரீமேக்கான ’பாபநாசம் 2’ படத்தில் கமல்ஹாசன் விரைவில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்த படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை ஸ்ரீப்ரியா பெற்றுள்ள நிலையில் இந்த படத்திலும் கமல்ஹாசன் நடிப்பதற்கான பேச்சுவார்த்தையும் தொடர்ந்து நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் தற்போது கமல்ஹாசன், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் ’விக்ரம்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இதனை முடித்துவிட்டு அவர் ’இந்தியன் 2’ படத்தில் நடிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதுமட்டுமின்றி பிக்பாஸ் சீசன் 5 மற்றும் உள்ளாட்சி தேர்தல் பிரச்சாரம் ஆகியவற்றிலும் கமல்ஹாசன் பிஸியாக இருப்பதாக ஸ்ரீபிரியா தெரிவித்துள்ளார்.

மேலும் வெற்றிமாறன் இயக்கும் படத்திலும் கமல்ஹாசன் நடிக்க உள்ளதால் கமல்ஹாசன் தேதி கொடுத்தால் மட்டுமே ’பாபநாசம் 2’ படம் உருவாகும் என்றும், இந்த படத்தின் ஹீரோயின் பற்றி எந்தவிதமான பிரச்சனையும் இல்லை என்றும் கமல்ஹாசன் எப்போது தயாராகி வருகிறாரோ அப்போதுதான் இந்த படம் உருவாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.