close
Choose your channels

கொரோனா போல சீனாவில் தொடங்கி ஐரோப்பாவை கலங்கடித்த ஒரு நோயை பற்றி தெரியுமா..?!

Thursday, March 26, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிளேக். தொற்று நோய் என்றாலே பிளேக் என்று பெயர் வைக்கும் அளவிற்கு கொடூரமாக மக்களை கொன்று குவித்த ஒரு தொற்று நோய். கருப்பு சாவு என அழைக்கப்பட்ட இந்த பிளேக் நோய் மரணங்களின் எண்ணிக்கை உலகம் முழுக்க 13 கோடியை தாண்டும்.

1347 முதல் 1351 வரை இந்த நோய் போட்ட ஆட்டத்தில் 48 கோடியிலிருந்து உலக மக்கள் தொகை 35 கோடியானது. ரிங்கா, ரிங்கா, ரோஸஸ் பாடல் கேள்விப்பட்டிருப்பீர்கள். அந்த பாடல் வேறொன்றுமில்லை. இந்த நோயின் அறிகுறிகளைத்தான் பாடலாக குழந்தைகளுக்கு சொல்லி வைத்திருந்தனர். பிளேக் வந்தவர்களுக்கு சிவப்பு நிறத்தில் உடலில் வட்டவட்டமாக தடிப்புகள் தோன்றும். கட்டிகளில் இருந்து இரத்தமும் சீழும் வடியும்.. அதனால் வரும் துர்நாற்றத்தை தடுக்க போஸஸ் மலர்களை மக்கள் பாக்கெட்டுகளில் வைத்திருப்பார்கள். மூச்சு விடமுடியாமல் கீழே விழுந்து இறந்து போவார்கள். அதுதான் ஆல் ஆர் டவுன்.

இந்த நோய் அப்போது எப்படி வருகிறது என்று மக்களுக்கு புரியவில்லை. கெட்ட காற்றினால் வருகிறது எனவும், சனியின் கோவம் எனவும் மக்கள் பல பூஜைகள் நடத்தி பார்த்தனர். ஆனால் இவளவு பெரிய அழிவுக்கும் காரணம் எர்சினியா பெஸ்டிஸ் என்கிற பாக்டீரியா உயிரினம் தான் என்பதை நுண்ணுயிர் ஆராய்ச்சி வளர்ச்சி அடைந்த பிறகு தான் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்தனர். இந்த எர்சினியா பெஸ்டிஸ் என்ன செய்யும் தெரியுமா..? எலி ஈக்கள் என அழைக்கப்படும் ஒருவகை ஈக்களின் வயிற்றில் வசிக்கும். இந்த ஈக்கள் எலியை கடித்து அதன் ரத்தத்தினை உரியும் போது பாக்டீரியா ரத்தத்தை வாய்ப்பகுதியிலேயே உறைய வைத்துவிடும். இதனால் ஈ இரத்ததை எலியின் உடலிலே வாந்தி எடுத்துவிடும். இதன் மூலம் எலியின் உடலுக்குள் பாக்டீரியா சென்றுவிடும். ஈக்கு பசி அடங்காது. எனவே மறுபடி வேறொரு எலி அல்லது மனிதனை கடிக்கத் துவங்கும். இப்படியே பாக்டீரியா ஒவ்வொரு உயிரினமாக மாறிச் சென்று தன் சந்ததியை வளர்த்துக்கொள்ளும்.

மனித உடலுக்குள் வந்த பாக்டீரியா மனிதனின் நிணநீர் முடிச்சுகளை தாக்கி வீங்க வைக்கும். இதனால் கை அக்குள், மற்றும் தொடை இடுக்குகளில் பெரிய கட்டிகள் ஏற்பட்டு அது உடைந்து ரத்தமும் சீழும் வெளிப்படும். பின்னர் தங்க முடியாத காய்ச்சல், மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிர் போய்விடும். மத்திய ஆசியாவிலும் சீனாவிலும் இந்த ஈக்களும் எலிகளும் அதிகம். அங்குதான் இந்த நோய் முதலில் தொடங்கியது. மங்கோலிய அரசர் ஜானி பெக் காஃபா நகரத்தினை முற்றுகையிட்டு போர் தொடுத்தார். காஃபா நகரமானது அப்போது இத்தாலியினரிடம் இருந்தது. ஜானி பெக் வீரர்களின் கப்பலில் எலிகளும் எலி ஈக்களும் பயணம் செய்துள்ளது. அந்த வீரர்களிடமிருந்து இத்தாலி வீரர்களுக்குள் நோய் தொற்றி பின் அவர்கள் நாடு திரும்பிய போது ஒட்டுமொத்த ஐரோப்பாவிற்கு பரவியது.

வட இந்தியாவிலும் இந்த நோயானது அப்போதே பரவியிருந்தது. 14ம் நூற்றாண்டிற்கு பிறகும் இந்த நோயானது பல இடங்களில் தோன்றி மறைந்தது. ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் வட இந்தியாவில் இந்த நோயானது திரும்பவும் பரவிய போது ஆங்கிலேயர் எலிகளைக் கொல்ல உத்தரவிட்டனர். ஆனால் அப்போது எலிகள் எங்கள் கடவுளின் வாகனம் எனவே கொல்லக்கூடாது என போராட்டங்களெல்லாம் நடந்ததாக வரலாறு உண்டு.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.