வாரிசு அரசியல்வாதிகளின் வெற்றியும் தோல்வியும்: ஒரு பார்வை
தமிழகத்தில் கடந்த பல ஆண்டுகளாக வாரிசு அரசியல்வாதிகள் உருவாகி வருவது தெரிந்ததே. ஆனால் இந்த மக்களவை தேர்தலில் கொஞ்சம் அதிகமாகவே வாரிசுகள் களமிறங்கினர். இந்த வாரிசு வேட்பாளர்களில் பெரும்பாலானவர்கள் வெற்றியை பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் வெற்றி பெற்ற வாரிசு வேட்பாளர்கள்:
தூத்துகுடி தொகுதியில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மகள் கனிமொழி
சிவகெங்கை தொகுதியில் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் மகன் கார்த்தி சிதம்பரம்
தேனி தொகுதியில் துணைமுதல்வர் ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் குமார்
மத்திய சென்னை தொகுதியில் முரசொலி மாறனின் மகன் தயாநிதி மாறன்
வடசென்னை தொகுதியில் ஆற்காடு வீராசாமி மகன் கலாநிதி வீராசாமி
தென்சென்னை தொகுதியில் தங்கபாண்டியனின் மகள் தமிழச்சி தங்கபாண்டியன்
ஆரணி தொகுதியில் கிருஷ்ணசாமி மகன் விஷ்ணுபிரசாத்
தமிழகத்தில் தோல்வி அடைந்த வாரிசு வேட்பாளர்கள்:
தென்சென்னை தொகுதியில் அமைச்சர் ஜெயகுமாரின் மகன் ஜெயவர்தன்
தருமபுரி தொகுதியில் டாக்டர் ராமதாஸ் மகன் அன்புமணி
கள்ளக்குறிச்சி தொகுதியில் விஜயகாந்தின் மைத்துனர் எல்.கே.சுதீஷ்