close
Choose your channels

'தளபதி 65' பட இயக்குனரகளின் பட்டியலில் இணைந்த பெண் இயக்குனர்!

Wednesday, January 29, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய் நடித்து வரும் ’மாஸ்டர்’ திரைப்படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ள நிலையில் இந்த படத்தை அடுத்து விஜய் நடிக்க உள்ள ’தளபதி 65’ படத்தை இயக்குபவர் யார் என்ற கேள்வி கோலிவுட் திரையுலகில் கடந்த சில மாதங்களாக உலாவி வருகிறது.

’தளபதி 65’படத்தை இயக்குனர்கள் பாண்டிராஜ், சமுத்திரக்கனி, மோகன்ராஜா, பேரரசு, மகிழ்திருமேனி, அட்லி, கோமாளி பட இயக்குநர் பிரதீப், உள்பட பல இயக்குனர்கள் பட்டியலில் உள்ளனர் என்பது தெரிந்ததே. ந்த நிலையில் ’தளபதி 65’ பட இயக்குனர்கள் பட்டியலில் தற்போது புதியதாக பெண் இயக்குநர் சுதா கொங்கரா இணைந்துள்ளார்.

‘இறுதிச்சுற்று’ என்ற மாபெரும் வெற்றி படத்தை இயக்கிய சுதா கொங்காரா தற்போது சூர்யா நடித்து வரும் ’சூரரைப்போற்று’ என்ற படத்தை இயக்கி முடித்துள்ளார். இந்த படம் வரும் ஏப்ரல் மாதம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் விஜய்க்கு சுதா கொங்காரா ஒரு கதையை கூறியுள்ளதாகவும் அந்த கதை விஜய்க்கு பிடித்து விட்டதால் ’தளபதி 65’ படத்தை இயக்க இவருக்கு அதிக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. இருப்பினும் இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியான பின்னரே உறுதி செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.