close
Choose your channels

கார் விபத்து: மனைவியுடன் படுகாயம் அடைந்த சன் டிவி சீரீயல் நடிகர்!

Wednesday, March 2, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சன் டிவி சீரியலில் நடித்து வரும் நடிகர் ஒருவர் தனது மனைவியுடன் காரில் சென்று கொண்டிருந்த போது விபத்துக்குள்ளாகி படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சன் டிவியில் பிரபலமான சீரியல்களில் ஒன்று ’வானத்தைப்போல’ என்பதும் இந்த சீரியலில் ஸ்ரீகுமார், அஸ்வந்த் திலக், மான்யா ஆனந்த், தேப்ஜனி மோடக், ராஜபாண்டி துரைசாமி, தரிஷ் ஜெயசீலன், சங்கர மகாநதி சங்கர் மற்றும் பலர் நடித்து வருகின்றனர்.

இந்த சீரியலில் முக்கிய கேரக்டரில் நடித்து வருபவர் மனோஜ்குமார். இவர் ஒரு இயக்குனர் என்பதும் இயக்குனர் இமயம் பாரதிராஜாவின் நெருங்கிய உறவினர் என்பது குறிப்பிடத்தக்கது .

இந்த நிலையில் மனோஜ்குமார் தனது மனைவி செல்வி, உதவியாளர் ரகுபதி ஆகியோருடன் காரில் சென்னையில் இருந்து தேனிக்கு சென்றார். விக்கிரவாண்டி அருகே கார் சென்றபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் மனோஜ்குமார் அவருடைய மனைவி மற்றும் உதவியாளர் மூவரும் காயமடைந்தனர். இதனை அடுத்து அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களுக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.