திடீரென இன்ஸ்டாகிராம் அக்கவுண்டை டெலிட் செய்த சன் டிவி சீரியல் நடிகை.. என்ன காரணம்?

  • IndiaGlitz, [Thursday,March 21 2024]

சன் டிவி சீரியல் நடிகை திடீரென இன்ஸ்டாகிராம் அக்கவுண்ட்டை டெலிட் செய்து விட்டு சமூக வலைதளங்களில் இருந்து விலகி விட்டதாக வெளிவந்திருக்கும் தகவல் அவரது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியாக உள்ளது.

திரை உலக மற்றும் சின்னத்திரை உலக பிரபலங்களுக்கு ரசிகர்களுடன் தொடர்பு கொள்ள சமூக வலைதளங்கள் மிகவும் உதவி செய்கிறது என்பதும் தங்களது புகைப்படங்கள் வீடியோக்கள் மற்றும் தாங்கள் நடிக்கும் திரைப்படங்கள், சீரியல்கள் குறித்த தகவலை ப்ரோமோஷன் செய்ய சரியான பிளாட்பார்ம் ஆக சமூக வலைதளங்கள் இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் சன் டிவியில் ஒளிபரப்பான ’ரோஜா’ உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்த நடிகை பிரியங்கா நல்காரி திடீரென தனது இன்ஸ்டாகிராம் அக்கவுண்ட்டை டெலிட் செய்து விட்டதாக கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தன்னுடைய இன்ஸ்டாகிராம் அக்கவுண்ட்டை நிரந்தரமாக டெலிட் செய்வதாகவும், பிரமோஷனுக்காக எனக்கு பொதுமக்கள் அனுப்பிய பொருட்கள் அனைத்தையும் தான் திரும்ப கொடுத்து விடுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் இதுவரை தனக்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி என்று கூறியுள்ளார்.

பிரியங்கா நல்காரி அதிகாரபூர்வமாக இன்ஸ்டாகிராமில் இருந்து விலகி விட்டார் என்பதும், தற்போது அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தை கிளிக் செய்தால் அந்த பக்கமே இல்லை என்று காண்பிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சமீபத்தில் பிரியங்கா நல்காரி தனது கணவரை பிரிந்த நிலையில் இது குறித்த கேள்விகள் சமூக வலைதளங்களில் அதிகம் எழுப்பப்படுவதால் மனரீதியாக பாதிக்கப்பட்டதால், முழுமையாக சமூக வலைதளத்தில் இருந்து விலகியதாக கூறப்படுகிறது.

சன் டிவியில் ஒளிபரப்பான ’ரோஜா’ மற்றும் ஜீ தமிழில் ஒளிபரப்பான ’சீதாராமன்’ ஆகிய சீரியல்களில் நடித்த பிரியங்கா நல்காரி தற்போது ஜீ தமிழில் ’நள தமயந்தி’ என்ற சீரியலில் நடித்துக் கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

'நடுவுல கொஞ்சம் இசைய காணோம்'.. 'சச்சின்' பட இயக்குனரின் ஒரு இசைத்தொடர்..!

லைக்கா மியூசிக் நிறுவனம், 'நடுவுல கொஞ்சம் இசைய காணோம்' என்கிற தலைப்பில், 'சச்சின்' பட இயக்குனர் ஜான் மகேந்திரன் வழங்க ஒரு இசை தொடரை வெளியிட்டு இருக்கிறது.

இளையராஜா பயோபிக் திரைப்படத்தில் கமல்ஹாசன்.. அவரே அறிவித்த அதிகாரபூர்வ தகவல்..!

இசைஞானி இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படமான 'இளையராஜா' என்ற படத்தின் அறிவிப்பு நேற்று வெளியானது என்பதும் இளையராஜா கேரக்டரில் தனுஷ் நடிக்கும் இந்த படத்தை 'கேப்டன் மில்லர்'

மகனுடன் சென்று இளைஞரை நடுரோட்டில் சரமாரியாக தாக்கிய தமிழ் நடிகை.. போலீசில் புகார்

தமிழ் நடிகை ஒருவர் தனது மகனுடன் சாலையில் சென்று கொண்டிருந்தபோது நடுரோட்டில் இளைஞர் ஒருவரை தாக்கிய விவகாரம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அந்த நடிகை மற்றும் அவரது மகன் மீது

மேஸ்ட்ரோவின் மந்திரத்திற்கு சரணடைகிறேன்! ஏ.ஆர்.ரஹ்மான் பாடலுக்கு பிரபல இயக்குனர் வாழ்த்து..!

இசைப்புயல் ஏஆர் ரகுமான் கம்போஸ் செய்த பாடல் ஒன்று வெளியாகி இருக்கும் நிலையில் இந்த பாடலை கேட்ட பிரபல இயக்குனர் ஒருவர் தனது சமூக வலைதளத்தில் 'என்ன ஒரு பாடல்,

விஜய் வருகையால் மீண்டும் கேரளாவில் ஓணம்.. மலையாளத்தில் பேசிய தளபதியின் வீடியோ வைரல்..!

தளபதி விஜய் தற்போது கேரளாவில் உள்ள திருவனந்தபுரத்தில் 'கோட்' படத்தின் படப்பிடிப்பில் உள்ளார் என்பதும் படப்பிடிப்பு தளத்தில் அவரை பார்ப்பதற்காக ஆயிரக்கணக்கான ரசிகர்கள் தினமும் காத்திருப்பது குறித்த