close
Choose your channels

'பிகில்' டீசர் குறித்த ஆச்சரியமான தகவல்

Thursday, August 29, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய் நடித்து முடித்திருக்கும் 'பிகில்' திரைப்படத்தின் அப்டேட் குறித்தும், படத்தின் டீசர் ரிலீஸ் குறித்தும் விஜய் ரசிகர்கள் அவ்வப்போது கோரிக்கை வைத்து வரும் நிலையில் நேற்று இந்த படத்தின் நிர்வாக தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாதி விரைவில் 'பிகில் அப்டேட்டுக்கள் வரும் என்றும் செப்டம்பர் மாதம் முழுவதும் பிகில் கொண்டாட்டம் என்றும் கூறினார்

இந்த நிலையில் அனைவரும் எதிர்பார்த்த 'பிகில் படத்தின் டீசர் குறித்த தகவல் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. பிகில் டீசர் சென்சார் பணி முடிந்துவிட்டதாகவும், விரைவில் டீசர் ரிலீஸ் தேதி குறித்த அப்டேட் வெளிவரும் என்றும் கூறப்படுகிறது.

பிகில் படத்தின் அப்டேட்டுக்கள் செப்டம்பர் முழுவதும் வெளிவரும் என அர்ச்சனா கல்பாதி கூறிய நிலையில் அவருடைய முதல் செப்டம்பர் அப்டேட் டீசர் ரிலீஸ் தேதியாக இருந்தால் அதைவிட விஜய் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி வேறு எதுவும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.