close
Choose your channels

நண்பரின் சிலை திறப்பு விழாவில் கலந்து கொண்ட ரஜினிகாந்த்!

Saturday, May 28, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் தனது நீண்ட நாள் நண்பரான மறைந்த கருணாநிதி அவர்களின் சிலை திறப்பு விழாவில் கலந்து கொண்டார்.

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 16 அடி வெண்கல சிலை திறப்பு விழா இன்று சென்னையில் நடைபெறுகிறது. இந்த சிலையை துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு அவர்கள் திறந்து வைக்கிறார்

தமிழக முதல்வர் முக ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் பங்கேற்கும் இந்த விழாவில் திரையுலகை சேர்ந்த பிரபலங்கள் சிலர் கலந்துகொள்கின்றனர். அந்த வகையில் சற்று முன்னர் இந்த சிலை திறப்பு விழாவிற்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் வருகை தந்தார். மேலும் கவிஞர் வைரமுத்து உள்பட ஒருசில திரை உலக பிரபலங்களும் இந்த விழாவில் கலந்து கொண்டதாக தெரிகிறது

இன்று திறக்க இருக்கும் கருணாநிதியின் சிலையில் கீழ்க்கண்ட ஐந்து பொன்மொழிகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

வன்முறையை தவிர்த்து வறுமையை வெல்வோம்.
அண்ணா வழியில் அயராது உழைப்போம்.
ஆதிக்கமற்ற சமுதாயம் அமைத்தே தீருவோம்.
இந்தி திணிப்பை என்றும் எதிர்ப்போம்.
மாநிலத்தில் சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி.


 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.