close
Choose your channels

சமூக வலைத்தளங்களில் வைரலாகும் ரஜினியின் செல்பி வீடியோ

Thursday, July 6, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கடந்த வாரம் உடல் பரிசோதனைக்காக அமெரிக்கா சென்றார் என்பது தெரிந்ததே. அமெரிக்காவில் உடல் பரிசோதனை மட்டுமின்றி அரசியல் ஆலோசனைகள், நண்பர்களுடன் சந்திப்பு, தயானந்த சரஸ்வதி ஆசிரமத்தில் தியானம் ஆகியவற்றிலும் அவர் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் ரஜினிகாந்த் எடுத்துக் கொண்ட செல்ஃபி வீடியோ ஒன்று தற்போது இணையதளத்தில் வைரலாகி பரவி வருகிறது. அந்த வீடியோவில், காரை டிரைவர் ஓட்ட அருகில் அமர்ந்தவற்று தனக்கே உரிய பாணியில் ரஜினிகாந்த் பேசிக் கொண்டே செல்வது போல் உள்ளது. இந்த வீடியோவை ரஜினி ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொண்டு வருகின்றனர்.
நேற்று முதல் ரஜினிகாந்த் அமெரிக்காவில் உள்ள கேசினோ கிளப்பில் அமர்ந்திருப்பது போன்ற புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையை கிளப்பி வரும் நிலையில் இந்த செல்பி வீடியோ ரஜினி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பினை பெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.