close
Choose your channels

சூப்பர் ஸ்டார் ரஜினியின் '2.0' படப்பிடிப்பு முடிய இன்னும் எத்தனை நாள் இருக்கின்றது தெரியுமா?

Monday, March 6, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் இயக்கத்தில் லைகாவின் பெரும் பொருட்செலவில் தயாராகி வரும் திரைப்படம் '2.0'. 'எந்திரன்' படத்தின் இரண்டாம் பாகமாக உருவாகி வரும் இந்த படத்திற்கு உலக அளவில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் கடந்த 2015ஆம் ஆண்டு இறுதியில் படப்பிடிப்பு தொடங்கிய இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதிக்கட்டத்தை நெருங்கிவிட்டதாக படக்குழுவினர்களிடம் இருந்து தகவல்கள் வெளிவந்துள்ளது.

ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர். ரஹ்மான் இசையில் இந்த படத்தில் இரண்டே பாடல்கள் தான் உள்ளது என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்நிலையில் ஏற்கனவே ஒரு பாடலின் படப்பிடிப்பு முடிந்துவிட்ட நிலையில் தற்போது இரண்டாம் பாடலின் படப்பிடிப்பு முழுக்க முழுக்க இரவில் நடந்து வருகிறது. தனியார் ஸ்டுடியோ ஒன்றில் நடந்து வரும் இந்த பாடல் காட்சியின் படப்பிடிப்பு இன்றுடன் முடிவடைகிறது என்றும் இந்த படத்தின் மொத்த படப்பிடிப்பும் இன்னும் 10 நாட்களில் முடிந்துவிடும் என்றும் அதன்பின்னர் போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் மற்றும் கிராபிக்ஸ் பணிகள் நடைபெறும் என்றும் தகவல்கள் வெளிவந்துள்ளது

ரஜினிகாந்த், எமிஜாக்சன், அக்சயகுமார் உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்திற்கு நீரவ் ஷா ஒளிப்பதிவும், அந்தோணி படத்தொகுப்பு பணியும் செய்கின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.