close
Choose your channels

'தலைவர் 161' படத்தின் மாஸ் டைட்டில் இதுதான்

Thursday, May 25, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ரஞ்சித் இயக்கவுள்ள 'தலைவர் 161' திரைப்படத்தின் டைட்டில் இன்று அறிவிக்கப்படவுள்ளதாக நேற்று இந்த படத்தின் தயாரிப்பாளர் தனுஷ் தனது சமூக வலைத்தளத்தில் அறிவித்திருந்தார் என்பதை பார்த்தோம்
இந்த நிலையில் சற்று முன்னர் இந்த படத்தின் டைட்டில் போஸ்டர் வெளியாகியுள்ளது. 'தலைவர் 161' படத்தின் டைட்டில் 'காலா' என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. டைட்டிலுக்கு கீழே கரிகாலன் என்ற வார்த்தையும் உள்ளதால் இந்த படத்தின் எதிர்பார்ப்பு வேற லெவலில் உள்ளது.
கரிகாலன் என்ற சோழ அரசன் தமிழகத்தை சிறப்பாக ஆட்சி செய்ததாக வரலாறு உள்ள நிலையில் தற்போதைய அரசியல் சூழலுக்கு ஏற்றவாறு இந்த மாஸ் டைட்டில் இருப்பதாக கூறப்படுகிறது. சந்தோஷ் நாராயணன் இந்த படத்திற்கு இசையமைக்கின்றார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.