close
Choose your channels

நடிகையின் காதலை படமாக்கும் இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா.. 12 ஆண்டுகளுக்கு பின் ரீஎண்ட்ரி

Wednesday, April 24, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கமல்ஹாசன், ரஜினிகாந்த் உட்பட பல பிரபலங்களின் படங்களை இயக்கிய சுரேஷ் கிருஷ்ணா 12 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ஒரு படத்தை இயக்க இருப்பதாகவும் இந்த படத்தில் சினிமா நடிகையின் காதல் தான் கதை கருவாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ’வீரா’ ’அண்ணாமலை’ ’பாட்ஷா’ ’பாபா’ உள்ளிட்ட படங்களையும் உலகநாயகன் கமல்ஹாசன் நடித்த ’சத்யா’ உள்பட பல சூப்பர் ஹிட் படங்களை இயக்கியவர் இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா.

இவர் கடந்த 2011 ஆம் ஆண்டு ’இளைஞன்’ என்ற தமிழ் படத்தையும் 2012 ஆம் ஆண்டு ஒரு கன்னட படத்தையும் இயக்கிய நிலையில் தற்போது 12 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் ஒரு படத்தை இயக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

சினிமா நடிகர் நடிகைகளின் காதல் தான் கதைக்கரு என்ற நிலையில் இந்த படத்திற்கு ’ஹீரோ ஹீரோயின்’ என்ற டைட்டில் வைத்திருப்பதாகவும் தெலுங்கு மற்றும் ஹிந்தியில் இந்த படம் உருவாகி வருவதாகவும் தெரிகிறது.

திவ்யா கோஷ்லே என்பவர் இந்த படத்தில் சினிமா நடிகை கேரக்டரிலும், பரேஷ் ராவல் இயக்குனர் கேரக்டரில் நடிப்பதாகவும் மேலும் இந்த படத்தில் சில முக்கிய நடிகர்கள் நடிக்க இருப்பதாகவும் தெரிகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம்சிட்டியில் நடைபெற இருப்பதாகவும் விரைவில் இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் தெரிகிறது.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.