close
Choose your channels

'ப்ரெண்ட்ஷிப்' டீசர்: ஹர்பஜன்சிங்கிற்கு வாழ்த்து கூறிய சக கிரிக்கெட் வீரர்!

Tuesday, March 2, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் முதல் முதலாக நடிக்கும் ’ப்ரெண்ட்ஷிப்’ என்ற திரைப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் ஆக்ஷன் கிங் அர்ஜுன் மற்றும் பிக்பாஸ் லாஸ்லியா உள்பட பலர் நடித்து வருகின்றனர் என்பது தெரிந்ததே.

இந்த படத்தின் டீசரை பாராட்டி ஹர்பஜன் சிங்கின் சக விளையாட்டு வீரர் தனது இன்ஸ்டாகிராமில் வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி பேட்ஸ்மேனாக இருந்து சமீபத்தில் தோனியுடன் ஓய்வு பெற்றவர் சுரேஷ் ரெய்னா. இவர் ஹர்பஜன் சிங்கின் ’ப்ரெண்ட்ஷிப்’ படத்தின் டீசரை பார்த்து அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ஹர்பஜன்சிங் இந்த படத்தில் ஒரு வித்தியாசமான திறமையை வெளிப்படுத்தி உள்ளார் என்றும் இது அவருக்கு கிடைத்த ஒரு மிகச்சிறந்த வாய்ப்பு என்றும் இந்த படத்தை முழுமையாக பார்க்க காத்திருப்பதாகவும் இந்த புதிய முயற்சி அவருக்கு வெற்றியை கொடுப்பதோடு, அடுத்தடுத்து வெற்றிகள் குவியும் என்றும் வாழ்த்து தெரிவித்துள்ளார். சுரேஷ் ரெய்னாவின் இந்த பதிவை சுமார் 3 லட்சம் பேர் லைக் செய்துள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.