close
Choose your channels

ரசிகருக்கு உண்மையாக இருக்கும் ஒரே நடிகர்.. சூர்யாவுக்கு குவியும் வாழ்த்துக்கள்!

Sunday, December 25, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

மாஸ் நடிகர்கள் எல்லோரும் தங்களுடைய திரைப்படத்தை புரமோஷன் செய்வதற்காகவும் வசூலை வாரி குறிப்பதாகவும் மட்டுமே ரசிகர்களை பயன்படுத்திக் கொள்ளும் நிலையில் சூர்யா மட்டுமே தனது ரசிகர்களுக்கு உண்மையாக உதவும் ஒரு நடிகராக இருந்து வருகிறார் என அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

சமீபத்தில் சூர்யாவிடம் இருந்து ரசிகர் மன்ற நிர்வாகிகளுக்கு ஒரு தகவல் சென்றுள்ளது. அந்த தகவலின்படி ரசிகரின் குடும்பத்தில் படித்த இளைஞர்கள் மற்றும் பெண்கள் இருந்தால் அவர்களின் மேற்படிப்புக்கான செலவுகளை ஏற்றுக் கொள்வதாக அறிவித்துள்ளார்.

மேலும் ரசிகரின் குடும்பத்தில் உள்ளவர்கள் நல்ல மதிப்பெண் பெறும் பட்சத்தில் அவர்கள் போட்டித் தேர்வுகளை எதிர் கொள்ளவும் அரசு பணியில் இடம் கிடைக்க தேவையான பயிற்சிகளுக்கு வழிவகை செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் மிகவும் முக்கியமான அறிவிப்பு என்னவெனில் ஒவ்வொரு ரசிகருக்கும் மருத்துவ காப்பீடு சூர்யாவின் செலவிலேயே வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ரசிகரின் இல்லத்தில் ஏதேனும் உயிரிழப்பு ஏற்பட்டால் அன்றைய தினமே ஒரு குறிப்பிட்ட தொகையை அந்த உயிரிழந்த ரசிகரின் குடும்பத்திற்கு வழங்கப்படும் என்றும் சூர்யா அறிவித்துள்ளார்.

பல நடிகர்கள் ரசிகர்களை தங்கள் சுயநலத்திற்காக பயன்படுத்திக் கொண்டிருக்கும் நிலையில் ரசிகர்கள் நன்றாக இருக்க வேண்டும் என்று நினைக்கும் ஒரே நடிகர் சூர்யா தான் என அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Login to post comment
Cancel
Comment