close
Choose your channels

ஆஸ்கார் மிஸ் ஆனால் என்ன? 100வது நாளை சிறப்பாக கொண்டாடும் 'ஜெய்பீம்' படக்குழு!

Wednesday, February 9, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூர்யா நடித்த ‘ஜெய்பீம்’ திரைப்படம் ஆஸ்கார் தேர்வு பட்டியலில் இடம்பெறும் என்று எதிர்பார்த்த நிலையில் இந்த படம் தேர்வாகவில்லை என்று நேற்று வெளியான தகவல் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை அளித்தது,

இருப்பினும் ‘ஜெய்பீம்’ திரைப்படம் வெளியாகி இன்றுடன் 100 நாள் ஆகிவிட்டதை அடுத்து படக்குழுவினர் சிறப்பு வீடியோவை வெளியிட்டுள்ளனர். மேலும் ‘ஜெய்பீம்’ திரைப்படத்தின் நூறாவது நாள் கொண்டாட்டத்தை ரசிகர்கள் இணையதளங்களில் ஹேஷ்டேக் பதிவு செய்து கொண்டாடி வருகின்றனர் என்பதும் இந்த ஹேஷ்டேக் மிகப்பெரிய அளவில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

‘ஜெய்பீம்’ திரைப்படத்தை ஒட்டுமொத்த சினிமா ரசிகர்கள் மற்றும் அரசியல் பிரபலங்கள், சினிமா பிரபலங்கள், சமூக ஆர்வலர்கள், நீதித்துறையை சேர்ந்தவர்கள் என அனைவரும் பாராட்டி உள்ளதை அடுத்து இந்த படம் மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்த ஒரு படமாக மாறிவிட்டதே இந்த படத்திற்கு கிடைத்த மிகப்பெரிய விருது என படக்குழுவினர் தெரிவித்து வருகின்றனர்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.