close
Choose your channels

இப்படி எந்த நடிகையாவது செய்ய முடியுமா? வேற லெவல் வொர்க்-அவுட் வீடியோ!

Wednesday, February 1, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழ் திரை உலகின் நடிகை ஒருவர் வேற லெவலில் வொர்க்-அவுட் செய்யும் வீடியோவை தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள நிலையில் இது மாதிரி இன்றைய நடிகைகள் யாராவது வொர்க்-அவுட் செய்ய முடியுமா? என அவரது ரசிகர்கள் சமூக வலைதளத்தில் சவால் விட்டு உள்ளனர்.

’காதலில் சொதப்புவது எப்படி’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் நடிகையாக அறிமுகமானவர் நடிகை ஐஸ்வர்யா மேனன். அதன் பிறகு அவர் ’ஆப்பிள் பெண்ணே’ ’தீயா வேலை செய்யணும் குமாரு’ ’தமிழ்ப்படம் 2’ ’நான் சிரித்தால்’ உள்பட பல படங்களில் நடித்தார்.

ஐஸ்வர்யா மேனனின் பெற்றோர்கள் கேரளாவை சேர்ந்தவர்கள் என்றாலும், ஐஸ்வர்யா மேனன் தமிழகத்தில் தான் பிறந்தார் என்பதும் தமிழகத்தில் தான் கல்லூரி படிப்பை முடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் ஐஸ்வர்யா மேனன், இன்ஸ்டாகிராமில் மட்டும் சுமார் 3 மில்லியன் ஃபாலோயர்களை வைத்துள்ளார். அவரது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்யப்படும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் மிகப் பெரிய அளவில் வைரல் ஆகும்.

இந்த நிலையில் சமீபத்தில் அவர் வொர்க்-அவுட் செய்யும் வீடியோவை பதிவு செய்துள்ள நிலையில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான லைக்ஸ்களும், ஏராளமான கமெண்ட்ஸ்களும் குவிந்து வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.