close
Choose your channels

தமிழ், தெலுங்கில் உருவாகும் 'ரங்கோலி' படத்தின் பூஜை!

Tuesday, February 15, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கோபுரம் ஸ்டுடியோஸ் தயாரிப்பு நிறுவனத்தின் சார்பாக K.பாபுரெட்டி மற்றும் G.சதீஷ்குமார் அவர்கள் தயாரித்துள்ள படம் ”ரங்கோலி”. இயக்குனர் வஸந்த்தின் உதவி இயக்குனராக பணிபுரிந்த வாலி மோகன்தாஸ் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இத்திரைப்படத்தை இயக்குகிறார்.

இத்திரைப்படத்தில் ஹமரேஷ் மற்றும் பிரார்த்தனா முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். ஹமரேஷ் நடிகர் உதயா மற்றும் இயக்குனர் விஜய் அவர்களின் சகோதரியின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாக இருக்கும் ”ரங்கோலி” திரைப்படம் இன்று பூஜையுடன் தொடங்கப்பட்டது. . இந்த படத்தில் நட்சத்திரங்கள் தேர்வு நடைபெற்று வருகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் மே மாதம் சென்னை, ஹைதராபாத் மற்றும் கேரளாவில் நடைபெறும் என படக்குழு அறிவித்திருக்கிறது. இந்த படத்திற்கு கேஸ்.எஸ்.சுந்தரமூர்த்தி இசையமைக்கவுள்ளதாகவும், மருதநாயகம் ஒளிப்பதிவு செய்யவுள்ளதாகவும் படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.