close
Choose your channels

சிவகார்த்திகேயனின் 'டாக்டர்' படத்தில் அறிமுகமாகும் பிரபலத்தின் மகள்!

Thursday, February 27, 2020 • தமிழ் Comments

சிவகார்த்திகேயன் நடிப்பில் கோலமாவு கோகிலா பட இயக்குனர் நெல்சன் இயக்கி வரும் திரைப்படம் ‘டாக்டர்’. இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் சமீபத்தில் சிவகார்த்திகேயனின் பிறந்த நாளில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது.

இந்த நிலையில் இந்த படத்தில் தற்போது பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளர் அர்ச்சனாவின் மகள் ஜாரா அறிமுகமாகிறார். இதனை அர்ச்சனா தனது சமூக வலைத்தளத்தில் உறுதி செய்ததோடு, தனது மகளை சினிமாவில் அறிமுகம் செய்யும் இயக்குனர் நெல்சனுக்கு அவர் நன்றியும் தெரிவித்துள்ளார்.

சிவகார்த்திகேயன் ஜோடியாக பிரியங்கா மோகன் நடிக்கும் இந்த படத்தில் வில்லனாக வினய் நடிக்கவுள்ளார். மேலும் யோகிபாபு உள்ளிட்ட பலர் நடிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார். இந்த படம் இவ்வருட இறுதியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Get Breaking News Alerts From IndiaGlitz