close
Choose your channels

இந்த நால்வரில் ஒருவரா 'தளபதி 66' ஹீரோயின்? காதலர் தினத்தில் அறிவிப்பு!

Sunday, January 30, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய் நடித்த ’பீஸ்ட்’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது என்பதும் இந்த படம் ஏப்ரல் மாதம் வெளியாக அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது இந்த நிலையில் தளபதி விஜய் நடிக்கவிருக்கும் அடுத்த திரைப்படமான ’தளபதி 66’ திரைப்படத்தை பிரபல தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்க இருப்பதாகவும் பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்க இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டிருந்தது. மேலும் இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

மேலும் நீண்ட இடைவெளிக்கு பின்னர் ஒரு முழுநீள ரொமான்ஸ் படத்தில் தளபதி விஜய் நடிக்கவிருக்கிறார் என்று செய்தி வெளியான நிலையில் இந்த படத்தின் ஹீரோயின் யார் என்பது குறித்த தகவல்கள் ஏற்கனவே கசிந்து வந்தது. ராஷ்மிகா மந்தனா, ராஷிகண்ணா, கைரா அத்வானி உட்பட ஒரு சிலரின் பெயர்கள் பரிசீலனையில் இருந்தது என்பதும் அது மட்டுமின்றி பிரபல பாலிவுட் நடிகை ஒருவரும் இந்த படத்தில் ஹீரோயினாக நடிக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில் ’தளபதி 66’ படத்தின் ஹீரோயின் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் காதலர் தினத்தில் அறிவிக்கப்படும் என செய்திகள் கசிந்துள்ளது. அன்றையதினம் மேற்கண்ட நால்வரில் யார் ஹீரோயின் என்பது தெரிந்து விடும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த படத்தில் பணிபுரியும் டெக்னீசியன் ஒரு சிலரின் பெயர்களும் அன்றைய தினமே அறிவிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவதால் தளபதி விஜய் ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பில் காத்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.