close
Choose your channels

'தளபதி 68' படத்தில் ஒரு பிக் நியூஸ்.. வெங்கட்பிரபு சொன்னதை கேட்டு ஷாக் ஆயிட்டேன்: கங்கை அமரன்

Wednesday, August 9, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய் நடித்து முடித்துள்ள ’லியோ’ திரைப்படம் வரும் அக்டோபர் 19ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் அவர் நடிக்க உள்ள அடுத்த திரைப்படமான ’தளபதி 68’ திரைப்படத்தை வெங்கட் பிரபு இயக்க இருக்கிறார் என்பது சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.

ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பில் யுவன் சங்கர் ராஜா இசையில் உருவாக இருக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு அக்டோபர் அல்லது நவம்பரில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் விறுவிறுப்பாக வெங்கட் பிரபு செய்து வரும் நிலையில் வெங்கட்பிரபுவின் தந்தை கங்கை அமரன் சமீபத்தில் ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்தார். அப்போது ’தளபதி 68’ படம் குறித்த ஒரு பெரிய செய்தியை என்னிடம் வெங்கட் பிரபு கூறினார். அதை கேட்டு நான் ஷாக் ஆயிட்டேன். இதை என்னால் தற்போது வெளியில் சொல்ல முடியாது.

ஆனால் தளபதி விஜய் இந்த படத்தின் கதையை கேட்டு மிகவும் மகிழ்ச்சி அடைந்தார். கண்டிப்பாக இந்த படம் ஒரு வெற்றி படமாக அமையும் என்று எதிர்பார்க்கிறேன். இந்த படத்தில் மூன்று அல்லது நான்கு பாடல்கள் இருக்கலாம் என்று தெரிகிறது. இந்த படத்தில் இடம்பெறும் நட்சத்திரங்கள் கண்டிப்பாக அனைவருக்கும் ஒரு ஆச்சரியத்தை ஏற்படுத்தும் என்று கூறியுள்ளார். அவரது இந்த பேட்டி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.