close
Choose your channels

தளபதி விஜய்யின் 'பீஸ்ட்' அரபிக்குத்து: சூப்பர் போஸ்டரை வெளியிட்ட சன் பிக்சர்ஸ்!

Sunday, February 13, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய் நடித்த ‘பீஸ்ட்’ படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில் சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த படம் வரும் ஏப்ரல் 14ஆம் தேதி தமிழ்ப் புத்தாண்டு தினத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் தற்போது தொடங்கிவிட்டன.

இந்தநிலையில் நாளை காதலர் தினத்தில் இந்த படத்தில் இடம்பெற்ற அரபி குத்து பாடல் வெளியாகும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இந்த பாடலை எதிர்பார்த்து விஜய்யின் கோடிக்கணக்கான ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

இந்த நிலையில் அரபிக்குத்து பாடலின் சூப்பர் போஸ்டர் ஒன்றை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள நிலையில் அந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. விஜய் மற்றும் பூஜா ஹெக்டே செம காஸ்ட்யூமில் இருக்கும் இந்த புகைப்படம் ரசிகர்களால் ரசிக்கப்பட்டு வருகிறது. மேலும் நாளை வெளியாக போகும் அரபிக் குத்து பாடல் இணையதளங்களை ஸ்தம்பிக்க வைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விஜய் ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ள இந்த திரைப்படத்தில் செல்வராகவன், யோகிபாபு, ஷைன் டாம் சாக்கோ, விடிவி கணேஷ், அபர்ணா தாஸ்உள்பட பலர் நடித்துள்ளனர் என்பதும் நெல்சன் இயக்கிய இந்த திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார் என்பதும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை பிரமாண்டமாக தயாரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.