close
Choose your channels

'பீஸ்ட்' படக்குழுவினர்களுக்கு சென்னை வெள்ளம் தந்த அதிர்ச்சி!

Friday, November 12, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சென்னையில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழை லட்சக்கணக்கான மக்களை சிக்கலில் ஆழ்த்தியுள்ள நிலையில் விஜய்யின் ‘பீஸ்ட்’ படக்குழுவினர்களுக்கும் அதிர்ச்சி தந்துள்ள செய்தி தற்போது வெளிவந்துள்ளது.

சென்னையில் தற்போது விஜய் நடித்து வரும் ‘பீஸ்ட்’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் தனியார் ஸ்டுடியோ ஒன்றில் போடப்பட்டுள்ள செட்டில் கடந்த சில நாட்களாக விஜய் உள்பட பலரும் முக்கிய காட்சிகளில் நடித்து வருகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக சென்னையில் பெய்த கனமழை காரணமாக ‘பீஸ்ட்’ படத்திற்காக போடப்பட்டுள்ள செட்டை வெள்ளம் சூழ்ந்த உள்ளதாக புகைப்படத்துடன் கூடிய செய்தி இணையதளங்களில் வெளியாகி உள்ளது.

இருப்பினும் கோடிக்கணக்கில் செலவு செய்து போடப்பட்ட ‘பீஸ்ட்’ செட்டுக்கு எந்த விதமான சேதமும் இல்லை என்றும் வெள்ளம் வடிந்தவுடன் மீண்டும் படப்பிடிப்பு தொடங்கும் அளவிற்கு செட் பாதுகாப்பாக இருப்பதாகவும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

விஜய், பூஜா ஹெக்டே, செல்வராகவன், யோகிபாபு, ஷைன் டாம் சாக்கோ, விடிவி கணேஷ், அபர்ணா தாஸ் உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கின்றார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் இந்த படம் அடுத்த ஆண்டு தமிழ்ப்புத்தாண்டு தினத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.