'தீ இது தளபதி, உங்க நெஞ்சின் அதிபதி.. விஜய்க்காக சிம்பு பாடிய மாஸ் பாடல்


Send us your feedback to audioarticles@vaarta.com


தளபதி விஜய் நடிப்பில், வம்சி இயக்கத்தில், தில் ராஜ் தயாரிப்பில் தமன் இசையில் உருவான திரைப்படம் ’வாரிசு’. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தில் இடம்பெற்ற பாடல் ‘தீ’ என்ற பாடல் இன்று வெளியாகும் என ஏற்கனவே படக்குழுவினர் அறிவித்திருந்தனர்.
அந்த வகையில் சற்று முன் இந்த பாடல் இணையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. தளபதி விஜய்க்காக சிம்பு பாடிய இந்த மாஸ் பாடலை விவேக் எழுதியுள்ளார் என்பதும் இந்த பாடலை தமன் கம்போஸ் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த பாடல் வெளியாகி ஒரு சில நிமிடங்களே ஆகியுள்ள நிலையில் அதற்குள் ஒரு மில்லியன் பார்வையாளர்கள் கிடைத்து விட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பாடல் தற்போது இணையதளங்களில் வைரலாக வரும் நிலையில் இந்த பாடலின் ஒரு சில வரிகள் இதோ:
உன்னை பார்த்து சிரிச்சா
அது உள்ளுக்குள்ள நெருப்பாக்கு
அவமானம் கிடைச்சா
அதில் கிரீடம் ஒன்ன உருவாக்கு
உன்னை சுத்தி உலகமே
ஒரு ஆனந்தம் அடையுமே
திருப்பி அடிக்கும் போதுதான்
யாரு நீன்னு புரியுமே
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.


