close
Choose your channels

ஓட்டு போட்ட கையோடு தளபதி விஜய் செய்த முதல் வேலை: வைரல் புகைப்படம்

Wednesday, April 7, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழகத்தில் நேற்று சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்ற நிலையில் தளபதி விஜய் சைக்கிளில் சென்று வாக்களித்தார் என்பதும், அவர் சைக்கிளில் சென்று வாக்கு அளித்ததற்கு நெட்டிசன்கள் பல்வேறு காரணங்களை தெரிவித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது என்பதும் தெரிந்தது. அதன் பின்னர் விஜய் தரப்பில் இருந்து விஜய் சைக்கிளில் ஏன் சென்று வாக்களித்தார் என்பதற்கு விளக்கம் அளிக்கப்பட்டது. அதுமட்டுமின்றி குஷ்பு, உதயநிதி உள்பட பலர் விஜய் சைக்கிளில் சென்று வாக்களித்தது குறித்த தங்களது கருத்துக்களையும் தெரிவித்தனர் என்பது தெரிந்ததே

இந்த நிலையில் நேற்று தனது ஜனநாயக கடமையை ஆற்றிய தளபதி விஜய், நேற்றிரவே ’தளபதி 65’ படத்தின் படப்பிடிப்பிற்காக ஜார்ஜியா சென்றுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. நேற்று இரவு சென்னை விமான நிலையத்தில் விஜய் இருந்த புகைப்படங்களும் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது என்பதால் அவர் ஜார்ஜியா சென்றது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது

‘தளபதி 65’ படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு ரஷ்யாவில் நடைபெற இருப்பதாக செய்திகள் வெளியானது. ஆனால் அதன் பின்னர் தற்போது ஜார்ஜியாவுக்கு படப்பிடிப்பு மாற்றப்பட்டதாகவும் இதனை அடுத்து ’தளபதி 65’ படக்குழுவினர் ஜார்ஜியா சென்றுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

’தளபதி 65’ படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்க உள்ளார் என்பதும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரிக்கும் இந்த படத்தை நெல்சன் இயக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.