close
Choose your channels

மு.க.ஸ்டாலினுக்கு கமல் நன்றி

Monday, July 17, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

உலக நாயகன் கமல்ஹாசனை தமிழக அமைச்சர்கள் மிரட்டும் வகையில் கருத்து தெரிவித்து வரும் நிலையில் விஷால் கமலுக்கு ஆதரவாக திரையுலகினர் இருப்பார்கள் என்று தெரிவித்தார். இந்த நிலையில் முதல்முறையாக ஒரு அரசியல்வாதியாக மு.க.ஸ்டாலின் கமல் கருத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் ஸ்டாலின் ஆதரவிற்கு கமல் தனது டுவிட்டரில் நன்றி தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது:

அன்புச் சகோதரர் ஸ்டாலின் அவர்கட்கு,

நன்றி தவிர உடனே ஒன்றும் சொல்லத் தோன்றவில்லை. என் ஆதங்கங்களில் பல கோபச் செய்தியிலும் கூட தென்பட்டதில் எனக்குப் பெரிய ஆறுதலே. ஒவ்வொரு வாக்காளனிலும் ஒரு தலைவன் இருக்கின்றான் என்பதை உணர மறுப்பவர் தலைவர்களாக நீடிக்கும் கனவு ஜனநாயகத்தில் பலிக்காது. பலிக்கவும் கூடாது' என்று தெரிவித்துள்ளார்.

கமலுக்கு ஆதரவு தெரிவித்த மு.க.ஸ்டாலினும், ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்த கமல்ஹாசனும் எதிர்காலத்தில் ஒருங்கிணைந்து செயல்படுவார்களா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.