close
Choose your channels

தனுஷ் படத்தின் டிரைலர் இன்று வெளியீடு

Friday, September 15, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தனுஷ் நடித்த 'விஐபி 2' சமீபத்தில் வெளியான நிலையில் அவர் தற்போது கவுதம் மேனன் இயக்கத்தில் 'எனை நோக்கி பாயும் தோட்டா' மற்றும் வெற்றி மாறன் இயக்கத்தில் 'வடசென்னை' ஆகிய படங்களில் நடித்து வருகிறார். அதுமட்டுமின்றி 'The Extraordinary Journey of the Fakir' என்ற ஹாலிவுட் படத்திலும் அவர் நடித்து வருகிறார்.

மேலும் தனுஷின் வொண்டர்பார் நிறுவனம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் 'காலா' மற்றூம் 'மாரடோனா', 'தரங்கம்' ஆகிய மலையாள படங்களையும் தயாரித்து வருகிறது.

இந்த நிலையில் 'தரங்கம்' படத்தின் டிரைலர் இன்று வெளியாகிறது. இந்த டிரைலரை தனுஷ் மற்றும் மலையாள நடிகர் பகத் பாசில் ஆகியோர் வெளியிடுகின்றனர். இந்த படத்தில் டோவினோ தாமஸ், பாலு வர்கீஸ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.