close
Choose your channels

முதல்முறையாக சூப்பர் ஸ்டார் தந்தையுடன் நடிக்கும் பிரபல நடிகை!

Sunday, February 13, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

திரையுலகில் சூப்பர் ஸ்டாராக இருக்கும் நடிகருடன் முதல் முறையாக அவருடைய மகள் இணைந்து நடிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தெலுங்கு திரை உலகின் சூப்பர் ஸ்டாராக இருந்தவர் மோகன்பாபு என்பதும், இவர் தமிழ் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் நெருங்கிய நண்பர் என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் மோகன்பாபுவின் மகளான மகளும் தெலுங்கு நடிகையான லட்சுமி மஞ்சு முதல் முறையாக தனது தந்தையுடன் இணைந்து நடிக்க உள்ளதாக இன்ஸ்டாகிராமில் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.

இதுகுறித்து லட்சுமி மஞ்சு தனது இன்ஸ்டாகிராமில், ‘என்னுடைய நீண்ட நாள் கனவான என்னுடைய முதல் ஹீரோ அப்பாவுடன் இணைந்து நடிக்கிறேன். இத்தனை வருடங்களில் முதல் முறையாக அவருடன் நடிப்பது ஒரு மிகப்பெரிய திரைப்பட விருதை வென்றது போன்ற உணர்வை நான் பெறுகிறேன். இந்த நாளுக்காக நான் மிகப்பெரிய அளவில் காத்திருந்தேன் என்பதும் எனது மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை என்பதும் இந்த வாய்ப்பை வழங்கிய அனைவருக்கும் நன்றி என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும், நாம் காணும் கனவுக்கு காலாவதி என்பதே இல்லை என்பதால் எப்போதும் கனவு காண்பதை நிறுத்த வேண்டாம் என்றும், தொடர்ந்து முயற்சி செய்து கொண்டே இருந்தால் கண்டிப்பாக ஒருநாள் நமது கனவு நிறைவேறும் என்றும் தனது பதிவில் நடிகை லட்சுமி மஞ்சு தெரிவித்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.