close
Choose your channels

ரஜினி படத்தை இயக்க மறுத்த பிரபல நடிகர்: இதுதான் காரணம்!

Tuesday, June 28, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

திரையுலகில் உள்ள ஒவ்வொரு நட்சத்திரங்களும் ரஜினியுடன் இணைந்து பணிபுரிய வேண்டும் என்ற கனவில் இருக்கும் நிலையில் ரஜினிகாந்த் படத்தை இயக்க வாய்ப்பு கிடைத்தும் அதை மறுத்த பிரபல நடிகர் ஒருவர் குறித்த தகவல் தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது

மலையாளம் மற்றும் தமிழ் திரையுலகின் பிரபல நடிகைகளில் ஒருவர் பிரித்விராஜ் என்பதும் இவர் மோகன்லால் நடித்த ’லூசிபர்’ உட்பட ஒரு சில படங்களை இயக்கியுள்ளார் என்பது தெரிந்ததே. மேலும் ’லூசிபர்’ படத்தின் இரண்டாம் பாகத்தையும் விரைவில் இயக்க இருப்பதாக அறிவித்துள்ளார்.

இந்த நிலையில் ’லூசிபர்’ திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்ற நிலையில் ரஜினிகாந்த் தன்னுடைய படத்தை இயக்க பிரிதிவிராஜூக்கு வாய்ப்பு கொடுத்ததாகவும் ஆனால் ரஜினிகாந்த் அவர்களுக்கு பொருத்தமான கதை தன்னிடம் இல்லை என்பதால் அந்த வாய்ப்பை அவர் மறுத்ததாகவும் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். ஆனால் அதே நேரத்தில் ரஜினிகாந்த் அவர்களுக்கு பொருத்தமான கதை தோன்றினால் கண்டிப்பாக அவரை அணுகுவேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

பிரித்விராஜ், விவேக் ஓபராய், சம்யுக்தா மேனன், நடித்த ‘கடுவா’ என்ற திரைப்படம் ஜூலை 7ஆம் தேதி வெளியாக உள்ளது என்பதும் இந்தப் படம் மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.