'தளபதி 67' படத்தில் நடிப்பதை மறைமுகமாக உறுதி செய்த பிரபல நடிகர்: இன்னும் எத்தனை பேர்?

தளபதி விஜய் நடித்திருக்கும் ’வாரிசு’ திரைப்படம் வரும் பொங்கல் தினத்தில் வெளியாக இருக்கும் நிலையில் அவருடைய அடுத்த படமான ’தளபதி 67’ படத்திற்கு இதுவரை இல்லாத அளவில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

இயக்குனர் லோகேஷ் கனகராஜ், ‘விக்ரம்’ என்ற மாபெரும் வெற்றி படத்தை அடுத்து இயக்கியிருக்கும் படம் என்பதாலும் ’மாஸ்டர்’ படத்திற்கு பிறகு மீண்டும் விஜய்யுடன் அவர் இணைய இருப்பதாலும் இந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் ’தளபதி 67’ படத்தில் ஏற்கனவே பிரபல மலையாள நடிகர்கள் நடிகர் பிருத்விராஜ், நிவின் பாலி ஆகியோர் நடிக்க இருப்பதாக கூறப்படும் நிலையில் தற்போது மற்றொரு மலையாள நடிகரான உன்னி முகுந்தன் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இவர் ’மாஸ்டர்’ படத்தின் பர்ஸ்ட் லுக் போலவே செல்பி ஒன்றை எடுத்து தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்து ’தளபதி 67’ படத்தில் நடிப்பதை மறைமுகமாக உறுதி செய்து இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே இந்த படத்தில் விஷால், சஞ்சய்தத், அர்ஜுன், மிஷ்கின், கவுதம் மேனன் உள்பட பல முக்கிய பிரமுகர்கள் நடிக்க இருப்பதாக கூறப்படும் நிலையில் இன்னும் எத்தனை பிரபலங்கள் இந்த படத்தில் இணைவார்கள்? என்ற கேள்வியை ஆச்சரியமாக ரசிகர்கள் எழுப்பி வருகின்றனர்.

நடிகர் உன்னி முகுந்தன் சமந்தாவுடன் நடித்த ’யசோதா’ திரைப்படம் நவம்பர் 11ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் பிரமாண்டமாக ரிலீசாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

விஷாலுக்கு நன்றி சொன்ன பிரதமர் மோடி.. கிண்டல் செய்த தமிழ் நடிகர்!

கடந்த சில நாட்களுக்கு முன்னர் காசி சென்ற நடிகர் விஷால், பக்தர்களுக்காக அங்கு செய்யப்பட்டிருந்த ஏற்பாடுகள் குறித்து பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்திருந்தார்.

மம்தா பானர்ஜி கலந்து கொள்ளும் நிகழ்ச்சியில் ரஜினிகாந்த்: சந்திப்பு நடக்குமா?

 மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி சென்னையில் கலந்து கொள்ளவிருக்கும் நிகழ்ச்சியில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களும் கலந்து கொள்ள இருப்பதால் இருவரும் சந்திப்பார்களா?

'அவள் வைத்திருக்கும் ஆயுதமே வேறு': சன்னிலியோனின் 'ஓ மை கோஸ்ட்' டிரைலர்!

பிரபல பாலிவுட் கவர்ச்சி நடிகை சன்னி லியோன் நடித்த தமிழ் திரைப்படம் 'ஓ மை கோஸ்ட்'. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருவதாகவும்

விஜய்யின் 'வாரிசு' படத்தின் செம அப்டேட்.. அதிகாரபூர்வ அறிவிப்பு!

தளபதி விஜய் நடித்து வரும் 'வாரிசு' படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிந்துவிட்ட நிலையில் இந்த படத்தின் தொழில்நுட்ப பணிகள் ஒருபக்கம் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளன. 

மாலத்தீவில் 'இந்தியன் 2' நடிகை: சூடேற்றும் கிளாமர் புகைப்படங்கள்!

உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் 'இந்தியன் 2'  படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்து வரும் நடிகை சமீபத்தில் மாலத்தீவு சென்றிருந்த நிலையில்